திருப்பூர்: 14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.! பெற்ற தாய், தந்தையே அரங்கேற்றி வைத்த கொடுமை.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 40 - 50 வருடங்களுக்கு முன் 12 வயதிலேயே திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். பின்பு மத்திய, மாநில அரசுகள் போட்ட கடுமையான சட்டத்தால், பெண்ணின் திருமண வயது 18 என்றும், ஆணின் திருமண வயது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களுக்கும் சிறை என்ற சட்டமும் கொண்டுவரப்பட்டு, நாடு முழுவதும் குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. 

இப்படி கடுமையாக சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவ்வப்போது சட்டத்திற்கு தெரியாமல் பல குழந்தை திருமணங்கள் அரேங்கேறி கொண்டுதான் இருக்கிறது. அதுபோல திருப்பூர் அருகே 14 வயது சிறுமிக்கு பெற்றோர்களால் திருமணம் நடந்து, அந்த சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்தநாதன் - ரேவதி என்ற தம்பதிக்கு14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறிய குடும்பம். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே வசித்து வந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இவர்களின் உறவினரான செல்வபாஸ்கர் (24 வயது) என்ற இளைஞருக்கு, தங்களது 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அதே பகுதியில் குடும்பம் நடத்திவந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார். மேலும், கடந்த திங்கட்கிழமை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு அழகான ஓரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனை அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் அந்த சிறுமியிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 YEARS LITTLE GIRL MARRIAGE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->