கடும் கட்டுப்பாடுடன் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு! தயாராக இருக்கும் பறக்கும் படை! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை  8.75 லட்சம் பேர் பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வில் எந்தவித முறைகேடு ஏற்படாமல் தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு உள்ளன.

இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக, மாநிலம் முழுவதும் 2944 தேர்வு மையங்கள் அமைக்கப்படுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.

மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி , வேலூர், கடலூர், சேலம், கோவை மற்றும் புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் கைதிகள் சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள். கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் அரசுத் தேர்வுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 


அதிகப்படியான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் நியமிக்கப்படுவார்கள். தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள்(hallticket) ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. அந்த சீட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு உள்ளன. மாணவர்கள், எந்த பதட்டமும், பயமும் இன்றி, தேர்வை எழுதுமாறு, பள்ளி கல்வி இயக்குநரகம் கேட்டு கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12'th public exam start today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->