டெல்டாவை புரட்டிப்போட்ட கனமழை.. "ஓரே நாளில் 10 செ.மீ".. குஷியில் தஞ்சை மக்கள்.!!
10cm Rain falls in Thanjavur
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு மே 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை படுத்திருந்தது.
அந்த எச்சரிக்கையை மெய்பிக்கும் வகையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மிக அதிக அளவாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்தபடியாக மயிலாடுதுறை மற்றும் அருப்புக்கோட்டையில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே பன்று மதுரையில் 4.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
10cm Rain falls in Thanjavur