யார் இந்த வீரமணி..?! 10 வயதில் மதுக்கடையை பூட்டிய சிறுவன்..!! தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்..!!! - Seithipunal
Seithipunal


மதுக்கடைக்கு பூட்டு போட்ட சிறுவன் போராட்டம் வெற்றி….

நேற்று உலக போதை ஒழிப்பு தினத்தை ஒட்டி, நாடெங்கிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பதாகைகளை ஏந்தி, வெயில் என்றும் பாராமல், விழிப்புணர்வு ஊர்வலங்களை மேற் கொண்டனர்.

இதே சமயம் நேற்று, திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே, காணப்பாடியில், இயங்கி வந்த டாஸ்மாக் கடைக்கு, ஒரு சிறுவன் தன் தாயுடன் வந்து பூட்டு போட்டு விட்டு, தர்ணாவில் ஈடுபட்டான்.

இந்த டாஸ்மாக் கடை, மூன்று ஆண்டுகளுக்கு, வாடகை ஒப்பந்தத்துடன் செயல்பட்டு வந்தது. இந்தக் கடைக்கு உரிமையாளர் முத்துராமலிங்கம் என்பவர். 

இவர் இந்தக் கடையை வாடகைக்கு விட்ட பின், இதே கடையில் வாடிக்கையாளராகி குடிக்கு அடிமையானார். இதனால், இவர்களது குடும்பத்தில் தினசரி பிரச்சினை வந்து கொண்டே இருந்தது.

இது போதாதென்று, முத்துராமலிங்கத்தின் மூத்த மகன், படிக்க வேண்டிய வயதில், படிக்காமல் தந்தையைப் போல அவனும், போதைக்கு அடிமையாகி விட்டான். இதனைக் கண்டு, இளைய மகன் வீரமணி (வயது 10) மிகவும் மன வேதனைப் பட்டான்.

வீட்டில், அப்பாவும் மகனும் குடித்து விட்டு, ரகளை செய்து கொண்டிருந்ததால், படிக்க முடியாமல் சிரமப் பட்டான். 4-வது படித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சு மனம், வெம்பிக் கொதித்தது.

மேலும், தந்தையின் நண்பர் ஒருவர் தினமும் குடித்து விட்டு வந்து, இந்த சிறுவனின் தாயாரிடமும் வந்து, தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த அந்த சிறுவன், நேற்று, தன் தாயுடன், அந்த டாஸ்மாக் கடைக்கு வந்து, தான் கொண்டு வந்த பூட்டினால் பூட்டி விட்டு, அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தான்.

இதனை அறிந்த வட மதுரை காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த சிறுவனிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் கடையை அகற்றுகிறோம், என்று உறுதி அளித்த பின்னர் தான், அந்த சிறுவன், அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    அவனது மன உறுதியைக் கண்டு, அனைவரும் அந்த சிறுவனைப் பாராட்டினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 years old boy lock the tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->