சாதி பாசம் காட்டும் சிவகங்கை போலீசார்..! ஒன்று திரண்ட 10 கிராம மக்கள்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், 55 ஊராட்சிகள் உள்ளன. இதில் 27 ஊராட்சிகள் இளையான்குடி காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிலும், 28 ஊராட்சிகள் சாலைக்கிராமம் காவல் நிலையக் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

இந்த இரண்டு காவல் நிலையங்களிலும் பணி புரியும் காவல் அதிகாரிகள், சாதிய உணர்வுடன் செயல் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு சமூகத்தினர் புகார் கொடுத்தால், வழக்குப் பதிவு செய்வதாகவும், மற்றொரு சமூகத்தினர் புகார் தந்தால், வழக்குப் பதிவு செய்யாமல், கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் புகார் சொல்கின்றனர்.

இதைக் கண்டித்து, இடையவலசை, இந்திரா நகர், புலியூர் உள்ளிட்ட 11 கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், இளையான்குடி தாலுகா அலுவலகத்தில், குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனை அறிந்த இளையான்குடி இன்ஸ்பெக்டர் நாகராஜன், எஸ்.ஐ. செந்துார் பாண்டியன் ஆகியோர், இந்தக் கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம், “போராட்டம் நடத்த வரக் கூடாது. மீறி வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று மிரட்டி உள்ளனர்.

இதனால், இந்த கிராம மக்களின் கோபம் அதிகரித்தது. நேற்று காலை இளையான்குடி தாலுகா அலுவலகத்தில், 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திரண்டனர்.

போலீசார் அவர்களை, தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க மறுத்ததால், சந்தைப் பேட்டை அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் எஸ்.ஐ. செந்துார் பாண்டியன் ஆகியோரை இடமாற்றம் செய்யும் வரை போராட்டம் தொடரும், என்று தெரிவித்துள்ளனர்.

     அதனால், இன்னும் அந்தப் பகுதி பதற்றமாகவே உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 VILLAGE PEOPLE PROTEST AGAINST SIVAGANGAI POLICE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->