இனி பைக் ஓட்ட பெட்ரோல் தேவையில்லை ,உப்பு தண்ணீரே போதும்.,10 ஆம் வகுப்பு மாணவியின் அசத்தல் சாதனை .! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி  சாதனை படைத்துள்ளார்.

சுற்றுசூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி  அதிகம் பயன்பாட்டில் இல்லாத நிலையில் ஆட்டோமொபைல் மற்றும் இவை சார்ந்த பல் நிறுவனங்கள் மாற்று எரிசக்திகளை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பூரிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு படித்துவரும் யோகேஸ்வரி கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் உப்பு தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயுவில் இரு சக்கர வாகனத்தை இயக்கும் முறையை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளார்.மேலும்  மாநில அளவில் முதல் பரிசும் பெற்றார்.

அதை பற்றி மாணவி யோகேஸ்வரி கூறுகையில் ,பெட்ரோல் டீசல் போன்ற எரிசக்திகளால் சுற்றுசூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,கூடிய விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்படும் சூழல் உள்ளதாலும் அதற்கு மாற்றாக புதிய வழியை கண்டுபிடிக்க எண்ணினேன் 

அதனாலே உலகில் அதிக பரப்பளவில் விரிந்து கிடக்கும் கடல் நீரை பயன்படுத்தி அதிலுள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்து ,அதன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையை முயற்சித்தேன் என்கிறார்.

மேலும் சுமார் ஒரு லிட்டர் உப்பு தண்ணீரை பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சுமார் 35 முதல் 40 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என்று யோகேஸ்வரி கூறினார்.

உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முயற்சியில் 4 முறை தோல்வியை சந்தித்த யோகேஸ்வரி தொடர்ந்து 5வது முறையாக பித்தளை, எஃகு, லெட், கிராஃபைடு ஆகிய இந்த நான்கு கனிமங்களை பயன்படுத்தி உப்புத்தண்ணீரில் மின்சாரத்தை செலுத்தி ஹைட்ரஜன் வாயுவை முறையாக பிரித்தெடுத்து வெற்றி கண்டார் .

மேலும் வாகனத்தில் உள்ள பேட்டரியை (மின்கலத்தை) பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்து இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மேலும் தொழிற்சாலை அமைத்து முறையாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் மாணவி யோகேஸ்வரி.
அவரது இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 standard girl drive bike with salt water


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->