பிறந்தநாள் கொண்டாடும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க்.! உதவி செய்ய வேண்டுகோள் விடுத்து, வெளியிட்ட உருக்கமான வீடியோ.! தவறாமல் பகிரவும்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் தனது தன்னம்பிக்கையால்  கேன்சர் நோயில் இருந்து விரைவில் மீண்டு வந்தார். பின்னர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து பல சாதனைகளை படைத்தார்.

அதுமட்டுமின்றி தன்னை போல் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ #YouWeCan  என்ற  தொண்டு நிறுவனம் ஒன்றையும் யுவராஜ் தொடங்கினார்.                                                          

 இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கேன்சரால் பாதிக்கப்பட்ட பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல், கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று யுவராஜ் சிங் தனது 37-வது பிறந்தநாளைக் கொணடாடி வருகிறார். மேலும்  இன்று வீடியோ மூலம் அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.



 

“கேன்சர் நோயில் இருந்து மீண்டு இன்று நான் புதிய பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன். எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி. என்னை போல நமது நாட்டில் லட்சக்கணக்கானோர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற பணமில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நான்  25 ஏழைக் குழந்தைகளுக்கு என்னுடைய தொண்டு நிறுவனத்தின்மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்டஉதவிசெய்ய உறுதியேற்கிறேன். நீங்கள் உதவி செய்ய விரும்பினால் மேலே உள்ள ‘லிங்’கை கிளிங் செய்து தகவலை பெறலாம். இந்த வீடியோவை பகிர்வதன் மூலமும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யலாம். நீங்கள் அளிக்கும் மிகச்சிறு தொகையும் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yuvraj singh post birthday video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->