ஆஹா! என்ன ஒரு ஒற்றுமை இருவருக்கும்! சாதனையில் ஒன்று சேர்ந்த புஜாரா - ட்ராவிட்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்நிலையில், இன்று டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டை இழந்து சொதப்பி வந்த நிலையில், புஜாரா மட்டும் நிலைத்து விளையாடி 123 ரன்களை குவித்து விக்கெட்டை இழந்தார்.

இவர் இந்த போட்டியில், சிறப்பாக விளையாடி இன்று 5000 ரன்களை கடந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் தடுப்பு சுவர் என்றழைக்கப்படும் முன்னாள் கேப்டன் ராகுல் ட்ராவிட்டுடன், புஜாராவை ஒப்பிட்டு வருவது தொடர்ந்து வருகிறது. புஜாராவும் , டிராவிட் போல் மிகவும் பொறுமையாக விளையாடி வருகிறார்.

ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 13288 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில், இருவரும் ஒரே அளவு இன்னிங்சில் 3000, 4000, 5000 ரன்களை கடந்துள்ளது மிக ஆச்சரியத்தை ஏற்பத்தியுள்ளது.

அதாவது, இருவரும் 67 இன்னிங்ஸில் 3000 ரன்களும், 84 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்தவர்கள். இன்று புஜாரா 108 இன்னிங்ஸில் 5000 ரன்களை கடந்துள்ளார். இதேபோல் ட்ராவிட்டும் 108 இன்னிங்ஸில் 5000 ரன்களை கடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர்களின் மிகப்பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

English Summary

WOW! What a solidarity to both! Pujara - Dravid!


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal