சென்னை சூப்பர்கிங்ஸ் அணியால் கிடைத்த உலக சாதனை!. - Seithipunal
Seithipunal


கடந்த 22-ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான முதல் தகுதி போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில்  சென்னை சுபெர்கின்ஹ்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நேரடியாக நுழைந்தது.

ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் குழுமம் இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்து வரும் நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ்  - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் செல்போன்கள் மூலம் பார்ப்பதையே விரும்பிவருகின்றனர். 

இப்போட்டியை மொத்தம் 83 லட்சம் ரசிகர்கள் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் லைவ் ஸ்ட்ரீம் வீடியோவை இதுவரை உலகில் அதிகம் பார்த்த வீடியோ பட்டியலில் இப்போட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 83 லட்சம் பேரில் 97 சதவீதம் பேர் மொபைல் வழியாகவே பார்த்துள்ளனர்.

இதுகுறித்து உலகின் முன்னணி கண்டெண்ட் டெலிவரி நிறுவனமான அகாமாய் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டாம் லெய்ங்டன் டுவிட்டரில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World record for Chennai Super Kings


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->