பாகிஸ்தான் வீரர்களும் கலந்துகொண்ட உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கம் வென்ற இந்திய வீரமங்கை! - Seithipunal
Seithipunal



ஐ.எஸ்.எஸ்.எப்.  உலக துப்பாக்கிச் சுடும் போட்டி இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வந்துள்ளனர். 

டெல்லியில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்ததால் கடந்த வாரம் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து  ஒலிம்பிக் ஆணையம், இனி எந்த ஒலிம்பிக் தொடர்பான போட்டி தொடர்களையும் இந்தியாவில் நடத்த முடியாது என அறிவித்தது. இந்தநிலையில், இந்த தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய தலைநகர் டெல்லியில், இன்று நடைபெற்ற  ஐ.எஸ்.எஸ்.எப். உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் 26 வயதான, இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.
 
இதனையடுத்து வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ள வீரமங்கை சந்தேலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

win gold in world cup


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->