கேப்டன் கோலி இல்லாமலும் இந்திய அணி வெற்றி பெறுமா! சாதித்து காட்டிய இந்திய அணி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடர்கள் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதனைத்தொடர்ந்து, பல இந்திய முன்னாள் வீரர்களை இந்திய அணியை புகழ்ந்து பாராட்டினார்கள். அத்தனைக்கும் காரணம், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின்  மிக அரிதான வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், சுமார் 50 ஆண்டுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்தது.

இந்திய அணி பெரும்பாலான சமயங்களில் விராட் கோலி தயவுடன் வெற்றி பெற்று வந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதாவது, ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. புஜாரா  இரு இன்னிங்சிலும் சிறப்பாக செயல்பட்டார்.

இப்போட்டியில், பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு என்பது மிகவும் சிறப்பானதாக இருந்தது. இந்திய அணி முதல் முறையாக கேப்டன் கோலியின் தயவு இல்லாமலேயே முதல் முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி சாதித்து வெற்றி பெற்றது. கேப்டன் கோலி களத்தில் இருந்தாலும் அவரது தயவு இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will India win if they do not want Captain Kohli! Indian team to achieve success


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->