ரசிகர்களை ஏமாற்றிய தல தோனி..நடந்தது என்ன.. - Seithipunal
Seithipunal


2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது லீக் போட்டியில் சென்னை அணியும்  ஹைதராபாத் அணியும் மோதிக்கொள்கின்றன.

 "டாஸ் "சை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதனால், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ரச்சின் ரவீந்தரா மற்றும் ருத்ராஜ் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் ருத்ராஜ்  26 ரன்களில் ஆட்டமிழக்க , ரவீந்திராவும் 12 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.

 மூன்றாவதாக களம் இறங்கிய ரகனே நிதானமாக ஆட்டத்தை விளையாடி 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரான சிவம் டுபே 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடஜா 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருக்க களத்தில் இறங்கினார்  முன்னாள் கேப்டன் தோனி. தோனி மைதானத்தில் இறங்கிய போது மைதானத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும்  "தோனி. தோனி" என கத்தியதால் அரங்கமே அதிர்ந்தது. களத்தில் இறங்கிய தோனியோ  இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து  ரசிகர்களை ஏமாற்றினார்.


 தற்போது சன்ரைஸ் ஹைதராபாத் அணி 166 ரன்களை வெற்றி என்ற இலக்குடன் களமிறந்துகிறது.

 28 % வெற்றி வாய்ப்பு சென்னைக்கும் ,72 %சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் உள்ளது என கருத்துக்கணிப்பு கூறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What happened to "Thala Dhoni" who deceived the fans?


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->