ரன் கட்டுப்படுத்த தெரிந்த எங்களுக்கு, இதைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை - விராட் கோலி பேட்டி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.

இதில், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஷார்ட் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

பின்னர் வந்த ஒவ்வொரு வீரரும் வந்தவுடனே நடையை கட்டினர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குர்னால் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இதனையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், தவானும் சிறப்பான தொடக்கம் தந்தனர். பின்னர் இருவரின் விக்கெட்டுகள் சரிந்த பின் இந்திய அணி ரன் எடுக்க தடுமாறியது. கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக்கும் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 61 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக 4 விக்கெட் எடுத்த குர்னால் பாண்ட்யாவும், தொடர் நாயகனாக ஷிகர் தவானும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை  1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.

இந்நிலையில், நேற்று வெற்றி பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, தொடக்கத்தில் ஆடிய ரோஹித்தும், தவானும் நன்றாக விளையாடும்போது நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என நினைத்தேன். பின்னர் மெதுவாக விக்கெட்டுகள் விழுந்தபோதுதான் தெரிந்தது, டி20 போட்டி எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பது புரிந்தது. ஒரு கட்டத்தில் பேட்டிங்கை பயன்படுத்தவில்லை என்றால் தோல்வியடைவோம் என நினைத்தேன். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் மற்றும் சாம்பா இருவரும் நன்றாக பவுலிங் செய்தனர்.

மேலும் பேசிய அவர், மொத்தமாக பார்க்கும்போது இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தொடக்க வீரர்களின் ஆட்டத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த போட்டியிலும் மழை குறுக்கீடு இருந்ததால், அணியின் இலக்கு 180 ரன்னாக இருக்கும் என நினைத்தேன். வானிலையைத்தான் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆட்டத்தில் ரசிகர்கள் எங்களை இறுதிவரை உற்சாகப்படுத்தினார்கள், என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We know what to run, we can not control this - Virat Kohli interview!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->