உடற்தகுதி எங்க இருக்கு? தினமும் 8 கிலோ ஆட்டு கறி தான் இருக்கு! ரவுண்டு கட்டிய வாசிம் அக்ரம்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டைகளை இழந்து 282 கண்களை சேர்த்து ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இதற்காக நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையுடன் விளையாடி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் விக்கெட்டை சாய்க்க முடியாமல் பாகிஸ்தான் அணி திண்டாடியது. மேலும் பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிவெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 49வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

இதுவரை நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7 முறை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எதிர்கொண்ட நிலையில் ஒருமுறை கூட ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியை உலக கோப்பையில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பதால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசீம் அக்ரம் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அணி தோல்வி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் உடனடியாக தோல்வி என்பது சங்கடமானது. ஒன்று இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது மிகப்பெரிய விஷயம்.

பனிப்பொழிவு போன்ற காரணங்கள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் வீரர்களின் பில்டிங் மற்றும் உடற்பகுதியை பாருங்க. கடந்த மூன்று போட்டியில் இவர்கள் சரியாக விளையாடவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடன் தகுதி சோதனை கூட இவர்களால் எதிர்கொள்ளவில்லை. தனிப்பட்ட முறையில் பெயர்கள் குறிப்பிட்டு சொன்னால் முகம் மாறிவிடும். தினமும் 8 கிலோ ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் தெரிகிறது. இவர்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்த வேண்டும்" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wasim Akram criticized Pakistan cricket team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->