"ஆஸ்திரேலிய அணியின் ஒரு பவுலர்களை விராட் கோலி சமாளிக்க முடியாது" - ஆஸ்திரேலிய கேப்டன் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில், கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்கு முன்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவில், ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. அதனை தற்போது, தகர்த்தெறிய இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தொடரில் மிகவும் அதிக கவனிக்கும் வகையில் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். அவர் இத்தொடரில் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.

இதனையடுத்து, விராட் கோலியை அவுட் செய்ய ஆஸ்திரேலிய அணி புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின், விராட் கோலி முதலில் எங்கள் பவுலர்களை சமாளிக்க அவரால் முடியாது என கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளார்கள். அவர்களை சமாளிப்பது கடினம். நாங்கள் விராட் கோலியை வம்பிழுப்பதிற்கு பதிலாக, உடனடியாக அவரை வெளியேற்றவே முயற்சி செய்தாலே போதும், என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"Virat Kohli can not deal with a bowler of Australian team" - Australian Captain Voices!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->