உலகக்கோப்பைக்கு முன் அணியில் இடம்பிடிக்க போவது யார்! இன்று முடிவு! ஆவலுடன் ரசிகர்கள்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி  ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணம் முடிந்த நிலையில், இந்திய அணி இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

இந்த 20 ஓவர் போட்டிகள் வருகிற 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வுக்கான கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி இந்த தொடருக்கான வீரர்களை தேர்வு செய்கிறது.

இந்த தொடரில் உலககோப்பைக்கு தயாராகும் விதமாக ரிசர்வ் வீரர்களின் திறமையினை சோதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ரோஹித்க்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், ரஹானே, பாண்ட் உள்ளிட்டோரை பரிசோதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

நியூசிலாந்து சுற்றுபயணத்தில் பாதியில் ஓய்வுக்கு சென்ற கேப்டன் வீராட்கோலி, அதற்கு முன்னரே ஓய்வளிக்கப்ட்ட பும்ரா அணிக்குள் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பார்மை மீட்ட தோனி அணியில் நிச்சயம் உண்டு என்ற நிலையில், 2-வது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் ரி‌ஷப் பண்ட்டுக்கும், தினேஷ் கார்த்திக்குக்கு இடையே போட்டி நிலவுகிறது. விக்கெட் கீப்பராக ரி‌ஷப் பாண்ட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் 5 பேர் விக்கெட் கீப்பர்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான். ராயுடு, ஜாதவ். பாண்ட், தோனி, கார்த்திக் என ஐந்து பேருமே விக்கெட் கீப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் 2-வது விக்கெட் கீப்பர் என்பதற்கான தேவை இல்லை. இவர்களில் யார் வேண்டுமானாலும் அந்த பணியை மேற்கொள்ளலாம். இவர்கள் ஐவரும் உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 
 
ஆல் ரவுண்டர்களில் ஹர்டிக் பாண்டியா, விஜய் ஷங்கர் நிச்சயமாக இடம்பெறுவார்கள் என தெரிகிறது. உலகக்கோப்பை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கருணாள் பாண்டியா இடம்பெற வாய்ப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today announce Indian squad of Australia tour of India


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->