புதுசா புதுசா கண்டுபிடிச்சு அவுட் ஆனா இப்படித்தான் நடக்கும்! பயிற்சியாளரை கடுப்பாக்கிய கே.எல்.ராகுல்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில், கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால்  டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை முடிந்தது.

இந்நிலையில், டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி  அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்கிடையே இரு அணிகளுக்கான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, விஹாரி, ப்ரித்வி ஷா ஆகியோர் அரை சத்தம் அடித்தனர். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல், 3 ரன்கள் எடுத்து அட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இது இந்திய அணியின் பயிற்சியாளர் பங்கரை கோபத்தில் ஆழ்த்தியது.

பின்னர் இது பற்றி பயிற்சியாளர் கூறுகையில், கே.எல்.ராகுல் நல்ல நிலையில்தான் இருக்கிறார். ஆனால் புதிது புதிதான வழிமுறைகளை கண்டுபிடித்து அவுட் ஆகிறார். அவர் பந்தை தேடி சென்று, தேவையில்லாமல் அவுட் ஆகி விடுகிறார். அவர் பார்முக்கு வர ஒரு இன்னிங்ஸ் போதும் என்றும், அவரின் திறமை பற்றி எங்களுக்கு தெரியும், என்றார்.

மேலும், அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது முறையாக வருகிறார், 30 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். அவர் இன்னும் இளம் வயது இல்லை. பொறுப்புணர்ந்து அவர் விளையாட வேண்டும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This should not be out! K.R.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->