எனது மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று! சதமடித்த புஜாரா பெருமிதம்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்குஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

தற்போது, இரு அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேயாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய புஜாரா தனது 16 வது சதத்தை அடித்தார். 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் இருந்து, அதிகபட்சமாக புஜாரா (123), ரோகித் சர்மா (37), பண்ட் (25), அஷ்வின் (25) எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் இருந்து ஸ்டார்க், கம்மின்ஸ், லியோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஹஸுல்வுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தற்போது, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை ஆடி வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. அந்த இதுவரை 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழந்துள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த, இந்திய வீரர் புஜாரா, முதல் இன்னிங்சில் இந்திய அணி எடுத்திருப்பது கவுரமான ஸ்கோர்தான். இந்த பிட்சில் பந்து அதிகமாக சுழல்கிறது. முதல் இரண்டு பகுதியில் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. ரன்களை சேர்ப்பதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். இந்த ஆடுகளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை இந்திய பந்து வீச்சாளர்களிடம் பகிருவேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தொடக்க வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும். அடுத்த முறை நன்றாக ஆடுவார்கள் என நினைக்கிறன். இந்த இன்னிங்சில் நான் சிறப்பாக விளையாடியதாக சக வீரர்கள் கூறினர். எனது டாப் 5 ஆட்டங்களில் இதுவும் ஒன்றாக கருதுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is one of my best games! Pujara is proud of


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->