கொல்கத்தா அணியை அடித்து நொறுக்கி, கெத்தாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!. - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2018 தொடரில்  கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஐதராபாத் அணியில் மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடிக்க  சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்களை எட்டியது. கடைசி ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.  20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் சேர்த்தது.

ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 175 ரன்களை வெற்றி  இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

பின்னர் 176 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களான லின் 31 பந்துகளில் 48 ஓட்டங்களும், நரேன் 13 பந்துகளில் 26 ஓட்டங்களும் சேர்த்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரங்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி, ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், இளம் வீரர் சுப்மன் கில் மட்டும் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டத்தை மாற்றினர். பின்னர் அவரும் அவுட் ஆகி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 160 ரன்களை மட்டும் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஹைதராபாத் அணியில், ரஷித் கான் 4 ஓவர்களில் 19 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்து சிறப்பாக பந்து வீசியுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறும்  இறுதிப் போட்டியில், ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Hyderabad team beat Kolkata by 13 runs to qualify for the final.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->