இவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்!.. கிரிக்கெட் பயிற்சியாளர் பரபரப்பு பேச்சு!. - Seithipunal
Seithipunal



இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் அணியில் அதிரடி மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என்று ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்  நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 50 ஓவரில் 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது. பின்னர், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 239 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் இந்த ஆட்டம் தற்செயலாக நடந்தது அல்ல. அவர்கள் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். நான் இதுபோன்ற எந்தவொரு ஆட்டத்தையும் இதுபோன்ற பார்த்ததில்லை.

இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்டத்தை விட மிகக்கடினமாக இருக்காது. முதல் மூன்று வீரர்கள் துவம்சம் செய்துவிட்டனர்.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில், ஆஸ்திரேலிய அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The coach said I have not seen any such match.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->