மெஸ்ஸியிடம் எதிர்பார்த்து ஏமார்ந்த ரசிகர்கள்!. கண்ணீர் விட்டு அழுதனர்!. - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக 
நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியுடன் குரேசியா அணி மோதியது. இதில் ஏற்கனவே மோதிய போட்டியில் அர்ஜெண்டினா அணி டிரா செய்ததால், இந்த போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடியது.


இப்போட்டியில் அர்ஜெண்டினா அணி அதிகமாக மெஸ்ஸியையே நம்பியிருந்தது. அதுமட்டுமின்றி நட்சத்திர வீரர் மரடோனோ அர்ஜெண்டினா அணி வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரேஷியா வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்த இடைவேளையில் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

குரேசியா அணி தனது இரண்டாம் பாதியில் ஆட்டத்தை கையில் எடுத்ததால், குரேஷியா அணியின் அண்டி ரெபிக் 53-வது நிமிடத்திலும், லூக்கா மாட்ரிக் 80-வது நிமிடத்திலும், இவான் ராகிடிக் 91-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

குரேஷியா வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு முன் அர்ஜெண்டினா வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில், குரேஷியா அணி அர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குரேசியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அர்ஜெண்டினா அணி ஏற்கனவே மோதிய போட்டியில் டிராவும், இந்த போட்டியில் 3-0 என்று மிகவும் மோசமாக தோல்வியடைந்துள்ளதால், அர்ஜெண்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜெண்டினா அணியின் இந்த தோல்வியை பார்க்க முடியாமல் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கண்ணீர்விட்டே அழுதனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The argentina was overwhelmed by the tears when they lost the match against croacia in the World Cup football match.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->