சத்தமில்லாமல் சாதிக்கும் தமிழகம்! தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தமிழக அணி வெற்றி! - Seithipunal
Seithipunal


தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவு சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மத்திய தலைமை செயலக அணியை எதிர்த்து  4-3 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.

 சென்னையில் நடந்து வரும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 41 அணிகள் கலந்துகொண்டன.

தமிழக அணி தனது முதல் போட்டியை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியுடன் மோதியது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் ஷாஹித் ஹாக்கி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், தமிழக அணி வீரர் ஜோஷ்வா, மணிகண்டன், செல்வராஜ், ராயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 4-2 என்ற கணக்கில் தமிழக அணி, மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது. 


 
தமிழக அணி தனது இரண்டாவது  போட்டியில் அசாம் அணியுடன் மோதி 13-1 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜி பிரிவில் தமிழக அணி முதலிடம் பெற்றது. தமிழக வீரர்கள் ராயர் 4 கோல், தாமு, செல்வராஜ், ஜோஷ்வா, மணிகண்டன் தலா 2 கோல் அடித்தனர்.

இதையடுத்து, தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது லீக் ஆட்டத்திலும் தமிழக அணி வெற்றி பெற்றது. எழும்பூரில் நடைபெற்ற போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை தமிழக அணி வீழ்த்தியது.

இந்நிலையில், தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவு சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மத்திய தலைமை செயலக அணியை எதிர்த்து  4-3 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Hockey Team Won


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->