கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் - தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்.!! - Seithipunal
Seithipunal


கனடாவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றுள்ளார். இந்தத் தொடர் 14 சுற்றுகளாக நடைபெற்ற நிலையில் ஒன்பது புள்ளிகள் பெற்று குகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். 

இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் நகரூராவை வீழ்த்தி தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 

இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியைப் பெற்றார் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ். மேலும் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் குகேஷ். 

கேண்டிடேஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் என்ற குகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu chess player gukesh champion in candidates chess series


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->