எகிப்தில் எதிரிகளை தெறிக்கவிட்ட தமிழ் வீராங்கணை : 3 தங்கம் வென்று சாதனை..!! - Seithipunal
Seithipunal


எகிப்தில் நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் போட்டியிட்ட செலினா 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் ஒபன் தொடரில் இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த 17 வயது செலினா செல்வகுமார் பங்கேற்றார்.

அவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் எகிப்து வீராங்கணை மரியம் அலோட்டபையை எதிர்த்து 4:3 (11-5, 12-10, 8-11, 6-11, 11-3, 6-11, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

அதே போன்று, இரட்டையர் பிரிவில் நைஜீரிய வீராங்கணை எஸ்தர் ஓபிபாமஸுடன் இணைந்து, எகிப்தின் ஃபரிதா பதாவி மற்றும் கிரீக்கின் மலமாதேனியா பாபாதிமிட்ரியோ ஜோடியை 3:2 (11-8, 12-10, 9-11, 8-11, 11-9) என்ற கணக்கில் வென்றார்.

முன்னதாக கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் மூன்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil girl won 3 gold medals in Egypt Table Tennis


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->