தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் புரட்டி எடுத்த முதல் ஆசிய அணி! படுதோல்வியடைந்த பரிதாபம்!  - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் அசத்தலான வெற்றியை பெற்றது.  இலங்கை அணியின் குசல் பெரரேவின் வரலாற்று சேசிங்கில் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடதக்கது. 

இதனிடையே நேற்று முன்தினம் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற  தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் 222 ரன்களில் தனது முதல் இன்னிங்சை இழந்தது.  அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டி காக் மட்டும் 86 ரன்கள் எடுக்க, தொடக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம் 60 ரன்களை விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதை அடுத்து ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியை விட 68 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் பாப் டூ பிளிசிஸ் (50) தவிர்த்து மீதி அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற 128 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதனையடுத்து 197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 என்ற நிலையில் இருந்தது. 

இன்று மூன்றாவது ஆட்டம் தொடங்கிய நிலையில் மேற்கொண்டு விக்கெட்டை இழக்காமல் அந்த அணியின் ஒசரே பெர்னாண்டோ குசல் மென்டிஸ் இலக்கை அடைந்து வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய அணிகள் தென் ஆப்பிரிக்காவில் தொடரை இழந்துள்ளன, சமன்செய்து இருக்கின்றன ஆனால் முதல் முறையாக இலங்கை அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

இலங்கை அணியின் முன்னணி வீரர்களான மேத்யூஸ், சந்திமால் காயம் காரணமாக தொடரில் ஆடாமல், இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணி சாதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகபெரிய வெற்றியாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka won the test series in south africa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->