இலங்கை சுழலில் சிக்கி தவிக்கும் தென்னாப்பிரிக்க அணி.! மீண்டும் சொற்ப ரன்னில் சுருண்டது.!! - Seithipunal
Seithipunal


இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக  குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு புயல்கள்  ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. இதனால் தொடக்க ஜோடி சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.

இலங்கை அணி தரப்பில் குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா  60 ரன்கள்  அடித்தும் ஆட்டமிழந்தனர். இலங்கை வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் சுழல்பந்துவீச்சாளர் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.

முதல்நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று ஆடிய இலங்கை அணியின் இறுதி ஜோடி தென்னாபிரிக்க அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. இறுதியில் ஹெராத் அவுட்டாக இலங்கை அணி மொத்தம் 338 ரன்களை குவித்துள்ளது. மகாராஜ் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, தனஞ்ஜெயா, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 34.5 ஓவர்களுக்கு வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணியின் கேப்டன் டுப்லெஸிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் டி காக் 32 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி சார்பில் தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south africa scored only 124 runs in this first innings against srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->