கங்குலி பிசிசிஐ தலைவர்?, கங்குலி வெளியிட்ட சோகமான தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) தேர்தல் நடத்த அக்டோபர் 23-ம் தேதி கடைசித் தேதியாகும். இந்த தேர்தலில் போட்டியிட  வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்தலில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் சார்பில் ஒத்த கருத்து அடிப்படையில் பொது வேட்பாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நிறுத்தப்படுவார் என தெரிகிறது. 

தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை தலைவர் பதவிக்கு கங்குலி மட்டும் மனுத்தாக்கல் செய்தால் அவர்தான் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். 

இந்த நிலையில் சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் நீங்கள் தான் அடுத்த பிசிசிஐ தலைவர் என சொல்லப்படுகிறதே என கேட்க, அதற்கு பதில் அளித்த கங்குலி, "இன்று மாலை 3 மணிவரை காத்திருங்கள், அதன்பின் பார்க்கலாம். உண்மையில் நாட்டுக்காக நான் விளையாடி இருப்பதும், நாட்டின் அணிக்காக கேப்டனாக இருந்ததும் பெருமையான தருணம் என கூறியுள்ளார். மேலும் பிசிசிஐ தலைவரானால், முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில் அக்கறை காட்டுவதுதான் முன்னுரிமையாக இருக்கும்" என்று கங்குலி தெரிவித்தார்.

பிசிசிஐ தலைவராக இப்போது கங்குலி பொறுப்பேற்றால், அவர் 9 மாதங்கள்தான் தலைவராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை, இருக்கும் காலத்தில் மிக சிறப்பான பணிகளைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கங்குலி தெரிவித்துள்ளார். 9 மாதங்கள் தான் அவர் பதவி வகிக்க முடியும் என்பது அவரது ரசிகர்களுக்கு சோகமான செய்தி தான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sourav Ganguly Next president to BCCI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->