இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஸ்மித், வார்னர்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.

இதில், பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

நேற்று சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 61 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக 4 விக்கெட் எடுத்த குர்னால் பாண்ட்யாவும், தொடர் நாயகனாக ஷிகர் தவானும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு திட்டம் வகித்து வருகிறது. அதிலும் கேப்டன் கோலியை அவுட் செய்வதற்கு, முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் உதவியை நாடியுள்ளது. அவர்கள் இருவரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி, ஒரு ஆண்டு தடையில் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவது டி20  போட்டி வலை பயிற்சியின் போது வர்னரும் ஈடுப்பட்டதாக தெரிகிறது. அவர் பவுலர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்ச் கூறும்போது, "ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் பவுலர்களுக்கு பயிற்சி அளிக்கவும், டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பெறுவதற்கு சில ஆலோசனைகளை வழங்கவும் அவர்களின் உதவியை நாடியுள்ளோம்" என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smith, Warner important role plays in test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->