டென்னிஸ் உலகின் முடிசூடா ராணி செரீனாவுக்கு இன்று திருமணம்.!! கைக்குழந்தையுடன் தனது காதலரை மணக்கிறார்.!!! - Seithipunal
Seithipunal


டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணி வலம் வருபவர் செரீனா வில்லியம்ஸ்.

அமெரிக்கா நாட்டை சேர்ந்த செரீனா 1995 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். 

தற்போது, 36 வயதாகும் செரீனா, இதுவரை, 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில், அதிக பட்டம் வென்றவர்களில் இரண்டாம் இடத்தில் செரினா உள்ளார்.

இந்த நிலையில், 'ரெட்டிட்' நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியானும், செரீனாவும் காதலித்து வந்தனர்.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற, ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்தார்.

 

அந்த தொடரை வென்ற பிறகு, சர்வதேச போட்டிகளில் செரினா பங்கேற்கவில்லை.

செப்டம்பர் மாதத்தில் செரீனாவுக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஒலிம்பியா' என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில், செரீனா - அலெக்சிஸ் ஓகியான் திருமணம் "நியூ ஓர்லான்சில்" இன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவில், பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தையுடன் திருமணம் செய்து கொள்ள போவது, மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று செரீனா வில்லியம்ஸ் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serena williams marriage to day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->