தோனிக்கு வயதாகி விட்டது.! அவர் இப்போது இளைஞர் இல்லை, அதனால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை.!! அதிரடி பேட்ஸ்மேன் கருத்து.!!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததற்கு முதல்நிலை பேட்ஸ்மேன்களான  தோனி, விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படாததே முக்கியக் காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வீசி இருக்கலாம். அதையும் சிறப்பாக செய்யவில்லை எனக் கூறிய அவர், நீங்கள் நினைப்பதுபோல் தோனி பழைய மாதிரி இளைஞராக இல்லை. அவருக்கும் வயதாகி கொண்டிருக்கிறது. போட்டிகளில் தோனி, பொறுப்பேற்று அணியை கடைசிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும்.

ஆனால், அவர் அவ்வாறு செய்யத் தவறி விட்டார். அதுமட்டுமில்லாமல் அவர், ஏராளமான டாட் பந்துகளை ரன்களாக மாற்றி இருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை. மேலும் அனைத்தையும் இப்போது இருக்கும் தோனியால் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார். இதில் இருந்து அவர் தோனிக்கு ஆதரவாக பேசுகிறாரா அல்லது எதிர்ப்பை தெரிவிக்கிறாரா என தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sehwag comments to dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->