இரண்டாவது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் சாதனை தொடருமா? - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடர்கள் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதனைத்தொடர்ந்து, பல இந்திய முன்னாள் வீரர்களை இந்திய அணியை புகழ்ந்து பாராட்டினார்கள். அத்தனைக்கும் காரணம், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின்  மிக அரிதான வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், சுமார் 50 ஆண்டுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்தது.

இந்நிலையில், இரண்டாவது போட்டி நடக்கும் பெர்த் மைதானம் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலகின் நம்பர் 1 அணி என்ற சிறப்பை பெறும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர் கூறியுள்ளார். முதல் போட்டியில் வென்று சாதனை படைத்த இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Second Test Match: Will the Indian team retain record?


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->