பொட்டை பிள்ளை பிறந்தாலே, வாயில் பொட்டென்று கள்ளி பால் திணித்து கொல்லும் ஊரில்.. இன்று இந்த பிள்ளை அடைந்த நிலை..? - Seithipunal
Seithipunal


தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கி. எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றுள்ளார்.

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், ஆசியான் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற கீதா போகத் உள்ளிட்ட பிரபல வீரர், வீராங்கனைகள் முறையே தங்களது எடைப் பிரிவுகளில் பங்கேற்றனர்.

கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வாங்கித் தந்தவர் சாக்‌ஷி. தனது வெற்றி குறித்து அவர் கூறுகையில்,

"12 வருடங்கள் இரவு பகல் பாராமல் உழைத்ததன் பலனாக இந்த வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவள் ஆவேன் என நான் எதிர்பார்க்கவில்லை.

இனி, எனக்குப் பின் வரும் வீரர்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன்.

எப்படியும் வெற்றி பெறுவேன் என நம்பினேன். எனவே தொடர்ந்து போராடினேன். என்னுடைய அதிகபட்ச பலத்தைப் பிரயோகித்து வெற்றி பெற விளையாடினேன்.

என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என மகிழ்ச்சி பொங்க சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sakshi Malik enter gold-medal round at National Wrestling Championship


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->