ஒரே போட்டியில் 10 கேட்ச் : தோனியை விஞ்சிய சகா! - Seithipunal
Seithipunal


தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஸ்விங் மற்றும் பவுன்சரால் பேட்ஸ்மேன் திணறினார்கள்.

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 286 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதில் விக்கெட் கீப்பராக விருத்திமான் சகா ஐந்து கேட்ச்கள் பிடித்து தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.

2-வது இன்னிங்சில் பும்ரா, மொகமது ஷமி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 130 ரன்னில் சுருண்டது. இதிலும் சகா கேட்ச் பிடித்து ஐந்து பேரை வெளியேற்றினார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் அதிக பேரை அவுட்டாக்கா காரணமாக இருந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் மகேந்திர சிங் டோனி 2014-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் டோனி 9 பேரை அவுட்டாக்கி சாதனைப் படைத்திருந்தார். அதை தற்போது சகா முறியடித்துள்ளார்.

மேலும் 82 பேரை அவுட்டாக்கி இந்திய விக்கெட் கீப்பர் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்த பரூக் என்ஜீனியர் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார்.

டோனி சாதனையை முறியடித்ததுடன் தென்ஆப்பிரிக்காவின் டேவிட் ரிச்சர்ட்சன், மார்க் பவுச்சர் சாதனையை சமன் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saha beats dhonis record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->