பிரபல கிரிக்கெட் வீரர் கவலை.! இங்கிலாந்து அணியை துவம்சம் செய்வார் என எதிர் பார்க்க பட்ட வீரர்.!! டெஸ்ட் அணியில் இல்லாததால், பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது!!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து  வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்ட காயம் காரணமாக இடம் பெறவில்லை.

மேலும், இங்கிலாந்து சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு, முக்கியமாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த பேட்டியில், ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்தால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுவார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர். அவர் காயத்தால் அவதிப்படுவதால், இந்தியாவுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tendulkar talk about bhuvaneshwar kumar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->