இந்தியாவின் இரண்டு தோல்விக்கு காரணம் இதுதான்! அதிரடி மட்டையாளர் விளக்கம்!. - Seithipunal
Seithipunal



இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்று அசத்தியது. அதன் பிறகு ஐந்து ஒரு நாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் 32 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடைசி இரண்டு போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றாவது போட்டியில் பந்துவீச்சையும் நான்காவது போட்டியில் பேட்டிங்கையும் தேர்வு செய்தார். ஆனாலும் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.

இந்தநிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் பணி பொழியவில்லை. அதேபோல் மொகாலியில் நடைபெற்ற நான்காவது போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் பனிப்பொழிவு இருக்காது என எதிர்பார்த்து இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அன்று எதிர்பார்ப்பிற்கு மாறாக அதிகமான பனிப்பொழிவு இருந்தது. 

இரண்டு மைதானமும் மட்டையாளர்களுக்கு சாதகமான மைதானம் தான். இதனால்  இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.  இதுவே இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியுற காரணமாக இ௯ருந்தது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for indian team loss last two match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->