கவுதம் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


11வது ஐபிஎல் போட்டியின் 21வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று விளையாடினர். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு  8 மணிக்கு தொடங்கிய போட்டியில்  டாஸ் வென்ற மும்பை அணியின்  கேப்டன் ரோகித் சா்மா பேட்டிங்யை தேர்வு செய்தாா். 

முதலில் மும்பை அணியின் தொடக்க  ஆட்டகாரா்கள்  லெவிசும் ,யாதவும் களமிறங்கினாா்கள்.  லெவிஸ் டக்கவுட் ஆகி  வெளியேறினாா்.  பின்னா் இஷான் கிஷானுடன் யாதவ் இணைந்து இருவரும் தங்களுடைய அதிரடியாக ஆடினர்.  

 எஸ்.ஏ. யாதவ்  29 பந்துகளிலேயே அரை சதத்தை எடுத்தார். இவரை தொடா்ந்து இஷான் கிஷானும் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினார்.  பின்னா் இவா்களில் சிறப்பான் ஆட்டத்தால் மும்பை அணி 10 ஓவா்கள் முடிவில் 1 விக்கெட்டு மட்டுமே இழந்து 93 ரன்களை எடுத்தது.

இறுதியில் மும்பை அணி 20 ஓவா்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.

168 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொர்ப்பரண்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சாம்சன் மற்றும் ஸ்டோக் சிறப்பாக ஆடினர். சாம்சன் 52 ரங்களும் ஸ்டோக் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் பரபரப்பான இறுதி ஓவரில் கவ்தம் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக வெற்றிபெற்றது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan royals won Mumbai Indians


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->