பிரபல இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட்.! சூழலை புரிந்து கொண்டு ஆடும் திறன் கொண்ட இளம் வீரர் இவர் மட்டும் தான்.!!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் சேர்க்கப் பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சூழலை புரிந்துகொண்டு ஆடும் திறன் கொண்ட ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டிகளில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார் என கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில், கடும் போட்டிகளுக்கிடையில்  ரிஷப் பாண்டிற்கு  ஆட வாய்ப்பு கிடைத்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட், ரிஷப் மிகவும் திறமையான வீரர். அவர் வித்தியாசமாக பேட்டிங் செய்ய விரும்புகிறார், அதில் சிறப்பாகவும் செயல்படுகிறார். அவர் எப்படி ஆடுகிறார் என்பது நமக்கு தெரியும். மேலும் 2017-2018 ரஞ்சி டிராபியில் 900 ரன்களை குவித்துள்ள அவர் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார் என்று கூறினார்.

மேலும், இங்கிலாந்து தொடரில், அவருக்கு பல சவால்களை கொடுத்தோம். பல வரிசைகளில் மாறி மாறி பேட்டிங் செய்ய வைத்தோம். சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடினார். அவர் அதிரடியாக ஆடுவது மட்டுமின்றி, சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஆடக்கூடியவர். கண்டிப்பாக அவரது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul dravid talk about rishab pant


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->