இங்கிலாந்து தொடரில் ராயுடு நீக்கம்! ரஹானேவும் இல்லை! ஆச்சரியமாக இடம்பெற்ற வீரர் யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அணியை தேர்வு செய்த போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அணியில் ரஹானே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அம்படி ராயுடுவிற்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் இடம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்க தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் ராயுடுவால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ரஹானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. 

இது குறித்து அணி வீரர்கள் பட்டியல் வெளியான போதே முன்னாள் கேப்டன் கங்குலி விமர்சனம் செய்து இருந்தார். ராயுடுவை காட்டிலும் இங்கிலாந்தில் ரஹானேவால் சிறப்பாக ஆடமுடியும். எனவே ரஹானே நிராகரிக்கப்பட்டிருப்பது கடினமான முடிவு என கங்குலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு தேர்வான வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க நடத்தப்பட்ட யோ யோ டெஸ்டில் ராயுடு தோல்வியடைந்துள்ளார். அதனால் அவர் இங்கிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாய்ப்பு ரஹானேவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு  இருந்த நிலையில் ஆச்சரியமாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahane one more time rejected in odi series against england


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->