இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட புஜாரா எவ்வாறு அவுட் ஆனார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!. - Seithipunal
Seithipunal



ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட், மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அதிகாலையில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தநிலையில் ஆரம்பத்திலேயே இந்திய அணி தடுமாறி ஆடி வந்தது. 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.



 

ஆனாலும் புஜாரா சிறப்பாக ஆடி தனது 16வது சதத்தை அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 123 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகி வெளியேறினார். அவர் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க முயன்றபோது பந்தை பிடித்த கம்மின்ஸ், ஸ்டம்புக்கு த்ரோ அடித்து ரன் அவுட் செய்தார்.

புஜாராவை ரன் அவுட் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 250 ரன்னுக்கு 9 விக்கெட்டுகள் இழந்திருந்தது. 

இன்று தொடங்கிய இரண்டாம் நாளில் இந்திய அணி 1 பந்து மட்டும் கடந்த நிலையில், கடைசி விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 250 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.


  


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pujara run out video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->