பப்ஜ் கேமிற்கு வந்த சோதனை., அதிர்ச்சியில் மூழ்கிய பப்ஜ் பிளேயர்கள்.!! நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal


உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களிடமும் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டு pubg mobile என்கிற கேம். இந்த கேம் இந்தியாவில் அதிகப்படியானோர்களால் விளையாடப்பட்டது.

இதனால் சில, பல அசம்பாவிதங்களும் அரங்கேறின. ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் இரவு பகலாக 45 நாட்கள் தொடந்து விளையாடி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தனது உயிரை துறந்தார்.

இதனால், அந்த கேமிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் pubg mobile game ற்கான விளையாட்டு நேரம் ஆறு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை இந்தியாவில் மட்டும்தான் உலகின் மற்ற நாடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கேமை விளையாடிக் கொண்டிருக்கும் போது இரண்டு மணி நேரத்தில் ஒரு எச்சரிக்கை வரும். அதன் பின்னர் நான்கு மணி நேரம் முடிந்தவுடன் ஒரு எச்சரிக்கை வரும்.

அதன் பின்னர் மொத்தமாக 6 மணி நேரங்களுக்கு பிறகு health ரிமைண்டர் என ஒரு லேபில் இடப்பட்ட பாப்பப் பாக்ஸ் கண்முன் தோன்றி காட்சி தரும். மீண்டும் முழுமையாக 24 நேரத்திற்கு பின் மறுநாள் தான் இந்த கேமை தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், பப்ஜ் கேமில் மூழ்கி போன பலருக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pubg game playing time within limits


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->