ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் கிரிக்கெட்டின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் நியமிக்கப்படுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து பேட் கம்மின்ஸ் பேசியதாவது, நான் ஆரோன் பின்ச் தலைமையின் கீழ் விளையாடுவதை மிகவும் ரசித்தேன் மற்றும் அவரிடமிருந்து நிறைய யூகங்களையும் கற்றுக் கொண்டேன். மேலும் எங்கள் ஒரு நாள் போட்டி அணியில் நிறைய அனுபவம் உடைய வீரர்கள் இருப்பது அணியை வழிநடத்த சுலபமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pat Cummins appointed new ODI captain of Australia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->