பாண்டியா, ராகுல் விவகாரத்தில் திடீர் திருப்பம்! பிசிசிஐ யின் புதிய முடிவு!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், ஒருநாள் தொடர் தொடங்கும் முன் பிரபல தனியார் தொலைக்காட்சி கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்து கொண்டு பேசிய போது, பாண்டியா பெண்களை அவதூறாக பேசியதாக பெரும் சா்ச்சை உருவானது. ராகுல் உடனிருந்தார் என்பது குற்றச்சாட்டாகி போனது. 

இந்த சர்ச்சை பலமான பின்விளைவை ஏற்படுத்தும் என அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஹா்திக் பாண்டியா தனது செயலுக்காக மன்னிப்பு தொிவித்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய ஹர்திக் பாண்டியா மட்டும் அல்லாது அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப, அவரும் அவசர அவசரமாக மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பினார். 

ஹர்திக் பாண்டியாவின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்,  ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இருவரும் அணியில் இருந்து உடனடியாக சஸ்பேண்ட் செய்யப்பட்டு நாடு திரும்ப பணிக்கப்பட்டனர். 

விசாரணை முடியும் வரை இருவரும் கிரிக்கெட் தொடர்பான எதிலும் பங்குபெறக்கூடாது என கடுமையான உத்தரவிட  இருவரும் பேரதிர்ச்சியுடன் நாடு திரும்பினார்கள். இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி என்று கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு  மத்திய  அமைச்சர் பாபுல் சப்ரியோ ட்விட்டரில் கடுமையாக குற்றச்சாட்டி இருந்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி நீயூசிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு மாற்றாக விஜய் ஷங்கர், ஷுப்மன் கில் நீயூசிலாந்து பறந்துவிட்ட நிலையில் ராகுல், பாண்டியா மீதான தடையினை தளர்த்த வேண்டும் என பிசிசிஐ தலைவர் சிகே கண்ணா கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். விசாரணை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் அவர்களை போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளார். நீயூசிலாந்து தொடருக்கு திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

நீயூசிலாந்து பறப்பார்களா அல்லது இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறுவர்களா என்பது சில தினங்களில் முடிவுக்கு வரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandya rahul issue bcci president wrote letter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->