தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய மியாண்டட்! - Seithipunal
Seithipunal


இலங்கையில் நடந்த 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அந்த ஒரே சிக்ஸர் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையயையே திருப்பி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 14  வருடங்களாக சர்வேதேச போட்டிகளில் ஆடிவரும் கார்த்திக் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். 

கடைசி பந்தில் சிக்சர் அடித்த கார்த்திக்கை, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்  ஜாவித் மியாண்டட்டும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரை  நான் பார்க்கவில்லை. பத்திரிகைகளில் படித்து தான் தெரிந்து கொண்டேன். கடைசி பந்தில் சிக்சர் அடிக்க வேண்டுமானால் அதிகப்படியான நம்பிக்கை இருக்க வேண்டும். கடைசி பந்தில் சிக்சர் அடித்த தினேஷ் கார்த்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் இது பந்துவீச்சாளர்களுக்கு பரிதாபம் என்றே கருதுகிறேன் என்றார் மியாண்டட்.

நவீன கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பது சாதாரணமாகி விட்டது. 20 ஓவர் போட்டியால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டது. ஏனென்றால் அந்த போட்டியில் அதிரடியாக ஆடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்று வங்கதேசம் சந்தித்த அதே அதிர்ச்சியை 1986-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த போட்டியில் இந்தியாவுக்கு கொடுத்தவர் தான் மியாண்டட். சேட்டன் சர்மா வீசிய கடைசி பந்தில் சிக்சர் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan man congrats indian


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->