மிகப்பெரிய உலக சாதனை படைத்த பிரபல கிரிக்கெட் வீரர்.! மிகக் குறைந்த போட்டியில் அதிக ரன்களை எடுத்த முதல் வீரர்.!! - Seithipunal
Seithipunal


ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் போட்டி இன்று புலவாயோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதனைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர்களாக இமால் உல் ஹக் மற்றும் பகர் சமான் ஆகியோர் களமிறங்கி ஆடி வரும் நிலையில், இதற்கு முன் 17 போட்டிகளில் விளையாடி 980 ரன்களை எடுத்திருந்த அதிரடி வீரர் பகர் சமான் இன்று நடைபெற்ற போட்டியில் 20 ரன்களை கடந்த போது, குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

மேலும், இந்த சாதனை பட்டியலில், இவருக்கு அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜோனாதன் ட்ராட், குயிண்டான் ட் காக், பாபர் அசாம் ஆகியோர் 21 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ளனர். இந்நிலையில், குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த பகர் சமானுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan cricket player world record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->