பாகிஸ்தான் அணி வீரரின் எலும்பை உடைத்த இங்கிலாந்து வீரர்..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஸ்டோக்ஸ் வீசிய பந்து தாக்கியதில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அஸாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுயிருக்கிறது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 184 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. 

இப்போட்டியில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர் பேட்டிங் 68 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து வீரர் வீசிய பந்து, அவரது முழங்கையில் பலமாக தாக்கியது. 

இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர், அவரது கையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. 4 முதல் 6 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இத்தொடரிலிருந்து விலகி நாடு திருப்ப இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan batssman bone damage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->