திடீரென டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்ட துவக்க மட்டையாளர்! அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal



ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வென்று உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. 

3 போட்டிகள் கொண்ட இத்தொடர் நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில், இத்தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற இருப்பதால் அவர் விளையாட முடியாத நிலையில் அணியிலிருந்து நீக்கப்படுவதாகத் அந்நாட்டு கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அணியில் இடம்பெற உள்ளார். இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியதால் டி20 தொடரை வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand opening batsman rest in T20


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->