வெளியானது அடுத்த அறிவிப்பு..! இந்திய அணியில் தலைகீழ் மாற்றம் - தாக்க களமிறங்கும் பெரும்படை.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில்அபாரமாக வென்றது.

இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. தற்போது நடக்கும் போட்டியில் இந்திய அணி வென்றலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் புதிய சாதனையை படைக்கும். இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி டெஸ்ட் முடிந்த கையோடு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. ஜனவரி 12-ஆம் தேதியன்று தொடங்கும் இந்த ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியலை இரு அணி நிர்வாகமும் வெளியிட்டுள்ளது.

https://img.seithipunal.com/large/large_muna-keena-31405.jpg

வீரர்கள் விபரம்

இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சஹால், கலீல் அகமது,ஜாஸ்பிரித் பும்ரா,முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), உஸ்மான் காவஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஷேன் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் பெரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் லியோன், ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், ஸ்டேன்லேக், ஆடம் ஸம்பா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new indian team announced for one day match


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->