சென்னையில் நடைபெறும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி லீக் ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடந்து வரும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 41 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் தமிழக அணி 2 போட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னையில் 5வது நாளாக நடக்கும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் அணிக்கு எதிராக தமிழக அணி ஆடியது.
 

தமிழக அணி தனது இரண்டாவது  போட்டியில் அசாம் அணியுடன் மோதி வெற்றியை கைப்பற்றியது. 13-1 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜி பிரிவில் தமிழக அணி முதலிடம். தமிழக வீரர்கள் ராயர் 4 கோல், தாமு, செல்வராஜ், ஜோஷ்வா, மணிகண்டன் தலா 2 கோல் அடித்தனர்.

இதற்கு முன் நடத்த முதல் லீக் போட்டியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியை வீழ்த்தி தமிழகம் வெற்றி பெற்றது. அதாவது, 4-2 என்ற கணக்கில் தமிழக அணி, மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

National hockey championship competition Chennai WonSeithipunal