"மச்சான் உள்ள தான் போடுறான்" தென்னாப்பிரிக்க மைதானத்தில் தமிழில் பேசி கெத்து காட்டிய தமிழன் முரளி விஜய்..!! - Seithipunal
Seithipunal


எங்க போனாலும் நம்ம ஊரு ஆட்களின் கெத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது, சிங்கப்பூரில் உருமாலை கட்டிக்கொண்டு, வேட்டியை மடித்து ஒருவர் மிடுக்குடன் நிற்கும் காட்சியில் தொடங்கி, இன்றைய இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் வரை தமிழர்களின் தனித்துவம் எங்கு போனாலும் வெளிப்பட்டு விடுகிறது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றொரு வீரரான ராகுலுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 287 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நான்காவது நாளில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சினால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இதனால் தங்களது யுத்தி எதிரணிக்கு தெரியாமல் இருக்க, முரளி விஜய் களத்தில் இருந்த ராகுலிடம், மெல்ல... மச்சான் இந்த ஓவர் எல்லாமே (பந்தை) உள்ளதான் போடுறாங்க’ என்று தமிழில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murali vijay speaks tamil during live match against SA.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->