ஸ்டாலின் பொய் பிரச்சாரம்! திமுக முகத்தில் கரியை பூசி அனுப்பிய பரிதாபம்! பரிதாபமான நிலையில் திமுக!  - Seithipunal
Seithipunal


வழக்கம் போல திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற மக்களவை தேர்தலில் வட தமிழகத்திலேயே 13 தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறார்கள்.  வட தமிழகத்தில் மிகவும் பலமாக இருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்து பேசினால் தான் அவர்களுடைய எதிர்ப்பு  வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தீவிரமாக பிரசாரங்களை செய்து வருகிறார் 

அப்போது பேசிய அவர் திமுக அரசின் சாதனைகளாக சில திட்டங்களை கூறினார். ஆனால் அந்த சாதனைகளை எல்லாமே பாமக அமைச்சர்களால் தமிழகத்தில் வந்தது  என்பதை குறிப்பிட அவர் மறந்து விட்டார். அவர் கூறிய சாதனைகளாக சேலம் மல்டி ஸ்பெஷாலிட்டி (ஸ்பேஷலா ஆட்டி - இப்படிதான் ஸ்டாலின் கூறினார்) மருத்துவமனையை, பாமகவின் மருத்துவர் அன்புமணி மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்து போது கொண்டு வரப்பட்டது.  அதேபோல தருமபுரி மருத்துவ கல்லூரியும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோதுதான் அனுமதி கொடுக்கபட்டது. 

மேலும் சேலம் ரயில்வே கோட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏகே மூர்த்தி, ஆர் வேலு ரயில்வே இணை அமைச்சர்களாக இருந்த போது அவர்களின் கடின உழைப்பினால் தான் கிடைத்தது என்று ஒரு விரிவான தகவலானது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்டத்தினை திமுக கொண்டு வந்ததாக ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் பேசும் திட்டங்கள் எல்லாம் பாமகவின் திட்டங்களாக இருக்க, இவையெல்லாம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக மு க ஸ்டாலின் விளம்பரம் செய்வதால் அக்கட்சியினரே இவர் என்ன பாமகவிற்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று முனுமுனுத்தபடி வெளியேறிவிட்டார்கள். 

23 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்தாலும், 18 வருடங்களுக்கு மேல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தும் தங்கள் கட்சி செய்த சாதனை என்று ஒன்றை கூறி வாக்கு கேட்க முடியதா பஞ்சத்திலா திமுக இருக்கிறது என்ற வருத்தம் திமுக தொண்டர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. 

தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த முக ஸ்டாலின் மாநிலத்தில் ஆளும் அதிமுகவினர், மத்தியில் ஆளும் பாஜக வினர் இவர்களை விமர்சிப்பதை விட பாமக எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவதற்காக பாமகவிற்கு எதிராகவும், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்க்கு எதிராகவும் மட்டுமே அதிக நேரம் எடுத்துக் கொண்டு எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார். இதுவரை என்ன செய்துள்ளோம் என கூறாமல், இதற்குமேல் என்ன செய்யப்போகிறோம் என்பதை சொல்லாமல், எதிர்த்து பிரச்சாரம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியவரும்.

பாமக அமைச்சர்களால் தமிழகத்திற்கு எவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் அமைந்தது என்பதற்கான ஒரு நீண்ட வரலாறு பின்வருமாறு உள்ளது. 

தமிழகத்தில் ரயில்வே துறையில் பாமக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்ட பட்டியலாக தொடர்ந்து கொண்டே இருக்கும். 

பாமக ரயில்வே அமைச்சர்கள் ஏ கே மூர்த்தியும் வேலுவும் சேலம் கோட்டம் அமைவதற்கு காரணமாக இருந்தார்கள் என்கிற அளவில் தான் பலருக்கு தெரியும். ஆனால் அந்த முயற்சியின் வெற்றிக்கு பின்னால் அவர்கள் சந்தித்த சவால்கள் பற்றி நிறைய பேருக்கு தெரியாது. 

தென்னக ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்கள் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதில் சேலம் கோட்டம் சமீபத்தில் தான் உருவானது. அது உருவாகுமுன் அந்த கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்கள் பாலக்காடு கோட்டத்தில் இருந்தது. பாலக்காடு கேரளாவில் இருக்கிறது. ஆனால் 1970 களில் பாலக்காடு கோட்டம் உருவானதில் இருந்து  கோவை மட்டுமின்றி தமிழகத்தின் மைய பகுதியில் இருக்கும் சேலம், ஈரோடு, கரூர், ஓமலூர் போன்ற ரயில் நிலையங்களும் பாலக்காடு கோட்டத்தின் கீழ் வந்தது. இங்கு தான் கேரள கம்யூனிஸ்ட் லாபி தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைத்தது. அதை பற்றி முதலில் பார்ப்போம்.

சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் ஜோலார்பேட்டை வரையில் சென்னை கோட்டத்தில் வரும். ஜோலர்பேட்டைக்கு அடுத்த ரயில் நிலையமான திருப்பத்தூர் முதல் தமிழக எல்லையான மதுக்கரை வரையிலும் உள்ள ரயில் நிலையங்கள் பாலக்காடு கோட்டத்தில் வரும். இதில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சுமார் 30 கிலோமீட்டருக்கு அப்பால் இருகூர் ரயில் நிலையம். அது வரையில் செல்லும் இரு தண்டவாளங்களில் ஒன்று சிங்கநல்லூர், பீளமேடு, வடகோவை வழியாக கோவை செல்லும். கோவைக்கு அடுத்த ரயில் நிலையம் போத்தனூர் சந்திப்பு. இந்த வழித்தடம் (இருகூர் முதல் போத்தனூர் வரையில்) சுமார் 30 கிலோமீட்டர். இன்னொரு வழிதடம் இருகூரில் இருந்து நேரடியாக போத்தனூர் செல்லும். இந்த வழித்தடம் வெறும் 11 கிலோமீட்டர் தான். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். 

பாமக மந்திரிகள் மத்திய அமைச்சரவையில் வருவதற்கு முன்பு வரையிலும் சென்னை - திருவனந்தபுரம் மெயில், சென்னை - மங்களூர் மெயில், சென்னை ஆலப்புழா அதிவிரைவு வண்டி, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வாராந்திர விரைவு வண்டி, ஐதராபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - மங்களூர் விரைவு வண்டி, யஷ்வந்த்பூர் - கொச்சுவேலி விரைவு வண்டி போன்ற கேரளாவுக்கு செல்லும் ரயில்கள் கோவையை தொடாமல் இருகூர் - போத்தனூர் பைபாஸ் வழித்தடத்தில் செல்லும்.

இதுவும் தவிர சென்னை - கோவை சேரன் எக்ஸ்பிரஸ் சென்னை கோட்டத்தில் உள்ள அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நிற்காது. சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பினால் நேராக சேலம் தான். அதே போல் தான் சென்னை - திருவனந்தபுரம் மெயில். சென்னை சென்ட்ரல் - சேலம் - ஈரோடு - பாலக்காடு என்று போகும். வேலூரில் (காட்பாடி) இருந்து கோவைக்கு செல்ல வேண்டும் என்றால் நீலகிரி தவிர வேறு இரவு ரயிலே கிடையாது என்கிற நிலை இருந்தது.

இத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் காரணம் ஒரே ஒரு நபர் - அவர் தான் தெற்கு ரயில்வே பொது மேலாளராக 1990 களின் இறுதியில் இருந்த தாமஸ் வர்கீஸ். இவர் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு பல கெடுதல்களை செய்தார் .

பாமக அமைச்சர்கள் மூர்த்தியும், வேலுவும் இவரை துணிச்சலுடன் எதிர் கொண்டார்கள். வாஜ்பாய் ஆட்சியில் மூர்த்தியும் மன்மோகன் சிங் முதல் ஆட்சியில் வேலுவும் இவரை நன்றாக தட்டி வைத்தார்கள். இதனால் கோபம் அடைந்த கேரள லாபி சென்னை மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில் நேரத்தை மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணிக்கு மாற்றினார்கள். அதன் காரணமாக மேற்கு தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

அன்றைய ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவுக்கு இங்கு நடக்கும் அக்கிரமங்கள் தெரியவில்லை. ரயில்வே இணையமைச்சராக இருந்த வேலு தான் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வெஸ்ட் கோஸ்ட விரைவு வண்டியின் நேரத்தை பழையபடி 12 மணிக்கு மாற்றினார். தாமஸ் வர்கீஸ் தலைமையிலான கேரள லாபி விடவில்லை. கோவையை தொடாமல் பைபாஸ் தடத்தில் பல ரயில்களை செல்ல வைத்தார்கள். இருகூரில் இருந்து கோவை வரையிலும் ஒரே ஒரு வழித்தடம் தான் இருக்கிறது. அதனால் டிராபிக் காரணமாக வண்டிகள் தாமதம் ஆகிறது என்கிற நொண்டி காரணத்தை சொன்னார்கள்.

பாமக மந்திரி மூர்த்தி இந்த வழித்தடத்தில் இரண்டாவது தண்டவாளத்தை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால் ரயில்வே பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் தரும் ரயில்வே போர்டில் கேரள ஆதிக்கம் காரணமாக இந்த திட்டத்திற்கு வருடா வருடம் குறைந்த நிதியே ஒதுக்கப்படும். அதுவும் தவிர இந்த கேரள லாபி ஒரு கீழ்த்தரமான முயற்சியில் இறங்கியது. இருகூர் - கோவையில் இரண்டாவது வழித்தடத்தை தடுப்பதற்கு இருகூர் - போத்தனூர் பைபாஸ் வழியில் இரண்டாவது தடத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். மூர்த்தி மற்றும் வேலு அவர்களின் கடும் முயற்சியால் இது தடுக்கப்பட்டது. இது மட்டும் வந்திருந்தால் சென்னையில் இருந்து கோவைக்கு ரயில் மூலமாகவே செல்லவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கும்.

2009 வரையிலும் பாமக மன்மோகன் சிங் மந்திரிசபையில் இருந்தது. அதன் பிறகு வந்த இரண்டாவது மன்மோகன் ஆட்சியில் அவர்கள் இல்லை. இருந்தாலும் இந்த இரு அமைச்சர்களும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தாமஸ் வர்கீஸ் ஓய்வு பெற்ற பிறகு கேரள லாபிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை தென்னக ரயில்வே பொது மேலாளர் பதவிக்கு வருவதற்கு உண்டான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். அதன் பயன் சில வருடங்களிலேயே தெரிந்து விட்டது. அவர்கள் செய்த முயற்சியின் விளைவாக

1. சேலம் கோட்டம் வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர், கரூர், ஓமலூர் ரயில் நிலையங்கள் சேலம் கோட்டத்தின் கீழ் வந்துவிட்டது.
 
2. இருகூர் - கோவை இரண்டாவது வழித்தடம் அமைந்து அதன் காரணமாக இருகூர் போத்தனூர் பைபாஸ் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில்களில் மங்களூர் மெயில், மங்களூர் அதிவிரைவு வண்டி தவிர்த்து அனைத்து ரயில்களும் இப்பொழுது கோவை வழியாக செல்கிறது. தற்சமயம் சென்னையில் இருந்து கோவைக்கு நான்கு விரைவு ரயில்கள் ( திருவனந்தபுரம் மெயில், ஆலப்புழா, சேரன் மற்றும் நீலகிரி)

3. சென்னை திருவனந்தபுரம் மெயில் மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் காட்பாடியில் நின்று செல்கிறது.

4.Emergency Quota (EQ) எனப்படும் அவசர கோட்டா டிக்கெட்டுகள் முன்பு பாலக்காடு கோட்டத்தின் கீழ் வரும் தமிழகத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில் குறைவாக தான் இருக்கும். ஆனால் சேலம் கோட்டம் வந்த பிறகு இப்போது நிறைய டிக்கெட்டுகள் இந்த கோட்டாவில் வருகிறது. 

5. சபரிமலை மகர விளக்கு திருவிழாவிற்கு செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் தற்சமயம் கோவை வழியாக செல்கிறது. 

6. கோவை - போத்தனூர் - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு இப்போது ரயில்கள் அந்த வழித்தடத்தில் செல்கிறது.

பாமகவை சாதி கட்சி, மரம் வெட்டி கட்சி என்று ஆயிரம் குற்றம் சுமத்தினாலும் அந்த கட்சியின் மந்திரிகள் மட்டும் இல்லாவிட்டால் கேரள லாபி தமிழக ரயில்வேயையே முழுங்கி ஏப்பம் விட்டிருப்பார்கள். அதை தடுத்ததற்காகவாவது அந்த கட்சியை பாராட்ட வேண்டும். ஒரு வேளை இதே ரயில்வே இணை அமைச்சர் பதவியை திமுகவுக்கு கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

இதில் பல தகவல்கள் பாமகவினருக்கே தெரியுமா என்பது தான் சந்தேகமே. மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்த அன்புமணி, ஏகே மூர்த்தி, அரங்க வேலு ஆகியோரின் சாதனைகளை திமுக, அதிமுக போல விளம்பரம் செய்து இருந்தாலே அந்த கட்சி குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றிருக்கும். அந்த விஷயத்தில் பாமக கோட்டைவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin give wrong information in election campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->